இந்திய கிரிக்கெட் அணி கடந்த 5 மாதங்களாக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், ஐ.பி.எல். அனுபவம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று கேப்டன் டோனி நம்பிக்கை தெரிவித்தார்.
                                          ஐ.பி.எல். அனுபவம் உலகக் கோப்பை போட்டிகளுக்கு கைகொடுக்கும்: டோனி

இந்தியா கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் கடந்த சில மாதங்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடி பயிற்சி பெற்றுள்ளனர்.

வங்காளதேசத்தின் மிர்புரில் நாளை மறுநாள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் டோனி பேசியதாவது:-

நாங்கள் ஏராளமான 20 ஓவர் போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். அது சர்வதேச போட்டிகள் இல்லை என்று கூறலாம். ஏராளமான ஐபிஎல் போட்டிகளில் அனைத்து வீரர்களும் விளையாடியிருக்கின்றனர்.

வங்காளதேசத்தில் உள்ள ஆடுகளத்தின் தன்மைகள் இந்திய ஆடுகளங்களின் தன்மையை ஒத்துள்ளன. அதனால் ஐபிஎல் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கும் முன்பாக, இலங்கையுடன் 17-ம் தேதியும், இங்கிலாந்துடன் 19-ந் தேதியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளோம். இத்தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானதுதான். எனவே அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இப்போட்டி மார்ச் 21-ம் தேதி மிர்புரில் நடக்கிறது. அதன்பின்னர் 23-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடுகிறது.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com