மக்களவைத் தேர்தல் நடப்பதால் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து, போட்டியை வெளிநாடுகளில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது.இந்நிலையில், ஐ.பி.எல். தொடரை இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன என்றும் ஏப்ரல் 16-ல் தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
                                               ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் 16-ல் தொடக்கம்: 3 நாடுகளில் போட்டிகள் நடக்கின்றன

இத்தொடரின் முதல் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. ஏப்ரல் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 30 வரை ஐக்கிய அரபு அமீரகத்திலும், மே 1 முதல் 12 வரை வங்காளதேசத்திலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மே 12-ந் தேதிக்குப் பிறகு அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ந்தேதி எந்த போட்டிகளும் நடத்தப்பட மாட்டாது. விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஐ.பி.எல். தெரிவித்துள்ளது.

முன்னதாக, போட்டிகளை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் நடத்த பிசிசிஐ விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது. எனினும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பாதுகாப்பு கவலைகளை முதலில் எடுத்துக்கொண்டு, அந்த மாநிலங்களிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என்றும் உள்துறை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com