7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

                                         
இதனால் ஐ.பி.எல். போட்டியை 2 கட்டமாக நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. முதல் பாதியை வெளிநாட்டிலும், 2–வது பாதியை இந்தியாவிலும் நடத்த திட்டமிட்டது.

இந்தியாவில் பெரும்பாலான ஆட்டங்களை நடத்தவே கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் போட்டியை நடத்தலாமா அல்லது முன்னதாக தேர்தல் முடியும் மாநிலங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாமா? என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இன்னும் 3 நாட்களில் ஐ.பி.எல். போட்டி இடம் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7–வது ஐ.பி.எல். போட்டியில் 44 ஆட்டங்களை இந்தியாவில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீதியுள்ள 16 ஆட்டங்களை வங்காளதேசத்தில் நடத்தி கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு அருகேயே வங்காளதேசம் இருப்பதால் அங்கு தான் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவே அங்கு 16 ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

2009–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி பாராளுமன்ற தேர்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com