2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா) உள்பட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

                                        


ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்று நடைபெறும். முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.

இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக்கை சந்தித்தார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 4-வது சுற்று முடிவில் ஆனந்த் 3 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக், லெவோன் அரோனியன் (அர்மேனியா) ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com