சுவிஸ் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெற்றியுடன் கணக்கைத் தொடங்கினார். மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் சாய்னா நேவால், தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த ஜப்பான் வீராங்கனை சிசாட்டோ ஹாஷியை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்னா, 21-12, 21-12 என்ற நேர்செட்களில் அபாரமாக வெற்றி பெற்றார். 34 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.
உலகின் 6-ம் தரநிலை வீராங்கனையான சாய்னா, 2ம் சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை சஷினா விக்னஸ் வாரனை எதிர்கொள்கிறார்.
இதேபோல், இந்தியாவின் முன்னணி வீரர்களான பருபள்ளி காஷ்யப், ஆனந்த் பவார் ஆகியோர் 3ம் சுற்றுக்கு முன்னேறினர்.

0 comments:
Post a Comment