ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதில் விராட் கோஹ்லி 881 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
                                      

தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு தலைமை ஏற்ற கோஹ்லி, வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 136 ஓட்டங்களை அடித்ததும் தரவரிசையில் அவரது புள்ளிகள் 886 ஆக உயர்ந்தது. ஆனால், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் 53 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்தார். இதனால் அவரது தரவரிசைப் புள்ளிகள் 881 ஆக குறைந்தது. எனினும் இரண்டாவது இடத்திலுள்ள டி வில்லியர்ûஸ விட 9 புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார் கோஹ்லி.

இந்திய அணியின் அடுத்த அணித்தலைவரான கோஹ்லி நியூஸிலாந்து சுற்றுப் பயணம் செல்வதற்கு முன் கடந்த ஜனவரியில் முதலிடத்தில் இருந்தார்.

நியூஸிலாந்து தொடரில் சரிவைச் சந்தித்த அவர், ஆசியக் கிண்ண சுற்றுத்தொடரில் எழுச்சி பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கோஹ்லியைத் தவிர்த்து இந்திய வீரர்களில் அணித்தலைவர் டோனி ஆறாவது இடத்திலும், ஷிகர் தவன் எட்டாவது இடத்திலும் உள்ளனர். ரோஹித் சர்மா 22-வது இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 50-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆசியக் கிண்ணத் தொடர் நாயகன் விருதை வென்ற இலங்கையின் திரிமன்னே முதன்முறையாக 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது இடத்திலும், அஸ்வின் 14-வது இடத்திலும் உள்ளனர். அமித் மிஸ்ரா 5 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்து வீச்சாளர் மலிங்கா 22-வது இடத்துக்கு முன்னேறினார்.

அணிகளுக்கான வரிசையில் 117 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. 113 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்திய அணியை விட 1 புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ள இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com